தஞ்சையில், பெற்ற மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக நவீன் காதலித்து வருகிறார்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, பல்லடம் பகுதியில் உள்ள ஒரு தறி ஆலையில் பணிபுரிந்தார். ஆனால், இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும், ஐஸ்வர்யாவின் பெற்றோர், கடந்த ஜனவரி 2ஆம் தேதி தங்கள் மகள் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இருப்பினும், காதலர்கள், கடந்த ஆண்டி டிசம்பர் 31ஆம் தேதியே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர், இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி வத்தி கோட்டை காவல் நிலையத்தில் நவீன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஐஸ்வர்யாவை என்னிடமிருந்து பிரித்துக் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கும் தெரியாமல் அவளைக் கொன்று எரித்ததாகவும் அதில் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரான பெருமாள் – ரோஜா உள்பட மூன்று உறவினர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில், ஜனவரி 2ஆம் தேதி இரவு, ஐஸ்வர்யாவை பல்லடத்திலிருந்து அழைத்துச் சென்ற அவரது பெற்றோரும், உறவினர்களும், அப்பெண்ணை நேராக ஒரு புளியமரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், பெருமாள் ஐஸ்வர்யாவை மரத்தின் ஒரு கிளையில் தூக்கில் தொங்கவிடச் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ’ஏன் அவன் அழுதுட்டே இருக்கான்..’ கடுப்பான கள்ளக்காதலன்.. தாய் அனுமதியுடன் கொடூரம்!
மேலும், நீயே தூக்கில் தொங்க வேண்டும் என்றும் அவர் அவரது மகளிடன் கூறியுள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா தற்கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பெருமாள் நாற்காலியை உதைத்துள்ளார். இதனால், ஐஸ்வர்யா உயிருக்குப் போராடியுள்ளார்.
ஆனால், ஐஸ்வர்யா இறந்துவிட்டதாக நினைத்து, அவரின் பெரியம்மா ஒருவர் அரிவாளால் கயிற்றை வெட்டி உள்ளார். ஆனால், கீழே விழுந்த ஐஸ்வர்யா உயிருடன் இருந்ததாலும், பெருமாளும், ரோஜாவும் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறியுள்ளனர்.
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
This website uses cookies.