யூடியூப் பிரபலம் ‘பரிதாபங்கள்’ கோபிக்கு திருமணம் நிச்சயமானது – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

Author: Rajesh
9 June 2022, 6:29 pm
Quick Share

பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர்கள் கோபி – சுதாகர். கல்லூரியில் ஒன்றாக படித்தபோதிலிருந்தே நட்பாக பழகி வரும் இவர்கள், சினிமாவின் மீது இருந்த ஆர்வம் காரணமாக படித்து முடித்த பின் சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலாவது சான்ஸ் கிடைக்குமா என தேடி அழைந்த இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்த இருவரும், அதில் அரசியல் தலைவர்களை ட்ரோல் செய்து வெளியிட்ட ஸ்பூஃப் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இவர்களது நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து தனியாக பரிதாபங்கள் என்கிற யூடியூப் சேனலை தொடங்கினர்.

அதில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்தும் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனதால், யூடியூப்பில் இருவரும் அசுர வளர்ச்சி கண்டனர். இதையடுத்து இவர்களுக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு, யாஷிகாவுடன் ஜாம்பி போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனிடையே பரிதாபங்கள் சுதாகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில், கோபிக்கு எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. பரிதாபங்கள் கோபிக்கு, யமுனா என்கிற பெண் உடன் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளதாம். நிச்சயத்தின் போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Views: - 556

1

0