அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் பகுதி நேர பட்டப்படிப்பு.! விண்ணப்பங்கள் வரவேற்பு.!!

13 August 2020, 11:12 am
Govt Tech - Updatenews360
Quick Share

கோவை : தமிழ்நாடு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2020 2021 ஆம் ஆண்டிற்கான பட்டய படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் சார்பாக நிர்வாகிகள் இண்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2020 மற்றும் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டயப் படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர முதலாமாண்டு பிஇ., பிடெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி தங்களது வாழ்வில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த கல்வி ஆண்டில் விண்ணப்பிப்பதற்கான பதிவு விண்ணப்ப படிவம் சமர்ப்பித்த சான்றிதழ் சரிபார்ப்பு தரவரிசை மற்றும் கலந்தாய்வு அனைத்தும் இணையதள வாயிலாக மட்டும் நடைபெறும். மாணவர்கள் WWW.PTPE_TMEA.COM என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேவையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.” என்றனர்.

Views: - 13

0

0