அழிவின் விளிம்பில் இருக்கும் பேஷன் ஃப்ரூட் : மீட்டெடுக்க விவசாயிகள் கோரிக்கை…

Author: kavin kumar
18 January 2022, 9:08 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கான‌லில் தாட்பூட்’ என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் (Passion fruit) அழிவின் விளிம்பில் உள்ள‌தால் அத‌னை மீட்டெடுக்க‌ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர் . இங்கு காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர் . தொடர்ந்து இங்கு கேரட், பீன்ஸ் ,அவரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு மற்றும் பல வகைகளான பிளம்ஸ் பேரிக்காய் அவகோடா , உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்றனர் .இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் .

இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல மருத்துவ குணம் கொண்டதாகும் கூறப்படுகிறது . தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் தாட்பூட் எனப்படும் பேசன் ஃபுரூட் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது . இந்த வகையான பழங்கள் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது . தற்போது இந்த தாட்பூட் எனப்படும் பேசன் ஃபுரூட் அழிவின் விளிம்பில் இருப்பதால் இதனை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Views: - 314

0

0