நாடோடிகள் 2, காதல் கண்கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோவை ஆகும்.
இவர் கோவையில் உள்ள வடவள்ளி, மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூபாய் 2,000 பணத்தை யாரும் திருடி சென்றதாக தெரியவந்தது.இதை அடுத்து தாய் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் காவல்துறை தொடர் விசாரணையில் செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியது ஒப்புக்கொண்டார்.
இதை அடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவர்கள் தோழியான சுபாஷினி ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூபாய் 1500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டையும் மீட்பதற்கான விசாரணையும் போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.