ஆஞ்சநேயர் மீது கடலைக்காயை வீசி எரியும் விநோதம் : ஒசூர் அருகே நூதன வழிபாடு!!

Author: Udayachandran
1 January 2021, 5:11 pm
Kadalai Thiruvizha- Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி ஆஞ்சநேயர் மீது கடலை எரிந்து பக்தர்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புத்தாண்டையொட்டி நாடு நலம்பெற வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எரிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர்.

ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் இன்று 63ஆம் ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறும்.

அதுபோல இன்று நடைபெற்ற விழாவில் ஆஞ்சநேயருக்கு காலை முதலே கோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கடலைக்காய்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலைக்காயை ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும் ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய பக்தர்கள், புத்தாண்டு பிறக்கும் போது ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில் கடலைக்காயை படையலிட்டு அவர் மீது எரிந்து வழிபட்டால் நாடு செழிக்கும் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை, பாரம்பரியமாக நடத்தப்பட்ட இந்த திருவிழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இதுபோன்ற வழிபாடுகள் நடைபெறுவது இல்லை என தெரிவித்தனர்.

Views: - 80

0

0