நிறையும் தருவாயில் பேச்சிப்பாறை அணை : நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு!!

18 October 2020, 8:10 pm
Pechiparai - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் குளம் குட்டைகள் நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்தது.

மாவட்டத்தின் முக்கிய அணைகள் ஆன பெருஞ்சாணி அணையின் மொத்த நீர்மட்டம் 77 அடியாக இங்கு 75 .30 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் கட்டமாக ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தொடர்ந்து தற்போது மூவாயிரத்து 667 கன அடி தண்ணீர் வினாடிக்கு திறந்நதுவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 . 20 அடியாக உயர்ந்தது. தொடர்ந்த அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது இதனால் ஆற்றோர நீர்வடிநில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Views: - 41

0

0