மெரினா இல்லைனா என்ன..? வீட்டில் 16 அடி உயரத்தில் பேனா சின்னம் வைத்த திமுக தொண்டர்.. வைரலாகும் போட்டோ!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 9:16 pm
Quick Share

மெரினாவில் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னத்தை அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக தொண்டர் ஒருவர் வீட்டில் பேனா நினைவு சின்னத்தை அமைத்தது தற்போது வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், அவர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மெரினா கடற்பகுதிக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். மேலும், பேனா நினைவு சின்னத்தை மெரினா கடலில் வைத்தால், நானே ஒருநாள் அதனை உடைப்பேன் என்று ஆவேசமாக கூறினார்.

இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் திமுக தொண்டர் ஒருவர் தனது இல்லத்தில் கருணாநிதி நினைவாக 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த கலைஞர் பேனா சின்னத்தை செதுக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 412

0

0