மக்களே கவனமா இருங்க…அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 April 2022, 8:27 pm
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாபரவலை தடுக்க மக்களை முக கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு அணியாத பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சென்னையில் மட்டும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 286 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0
0