கோவை உக்கடம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை இருந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு, கோவை உக்கடம் வின்செண்ட் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர்கள் நின்றுகொண்டிருந்துள்ளனர்.
எனவே, அந்த இளைஞர்களை பிடித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது முன்னுக்குப் பின்னாகவே அவர்கள் பதிலளித்துள்ளனர். இதில், திடீரென ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் சுதாரித்துகொண்ட பொதுமக்கள், இருவரை சுற்றி வளைத்துப் பிடித்து அவர்களை சோதனை செய்துள்ளனர்.
இந்தச் சோதனையில் அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது குறித்து உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்த தகவலின் பேரில் உக்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையும் படிங்க: மகன்களுக்கு பாலியல் தொல்லை… GAY சகோதரர்களால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தொடர்ந்து, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள், கோவை வடவள்ளியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த பைசல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தப்பி ஓடியவர் குறித்தும், இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.