ஆடிப்பெருக்கை முன்னிட்டு அமராவதி ஆற்றில் திரண்ட மக்கள் : விதிகளை மீறி புனித நீராடல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 1:05 pm
aadi 18- Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அமராவதி ஆற்றில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் புனித நீராடியதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாராபுரம் அமராவதி ஆற்றில் பொதுமக்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டடிருந்த நிலையில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் முளப்பாரிவைத்து குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர்.

அமராவதி ஆற்றில் புனித நீராடினர். இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் அகத்தீஸ்வரர் கோவில் வழிபட அனுமதி மறுப்பால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து கோவிலின் நடை முன்பு தரிசனம் செய்தனர்.

Views: - 480

0

0