கோவையில் கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள்: இதுவரை 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி..!!

22 April 2021, 4:34 pm
coorna vaccine - updatenews360
Quick Share

கோவை: கோவையில் இதுவரை கொரானா தடுப்பூசி 3,19,000 நபர்களுக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை கோவையில் 4 ஆயிரம் எண்ணிக்கையில் இருப்பு இருந்தன. 45 ஆயிரம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறன. தடுப்பூசிக்காக 112 மையங்கள் கோவையில் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகின்றன.

அரசு தனியார் வளாகங்களில் கொரோனா தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. 3,19,000 தடுப்பூசிகள் இதுவரை கோவையில் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளன. சிகிச்சை மையங்கள் தடுப்பூசிகளின்றி மூடப்படுவதாக வெளியான தகவல் தவறென்று குறிப்பிட்டிருக்கின்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு மையங்கள் முழுமையாக செயல்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பு மருந்துகளில்லாமல் இருக்கலாமென தெரிவித்திருக்கின்றன.

Views: - 201

0

0