அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ்: கொண்டாட்டத்தில் மன்னார்குடி மக்கள்…!

8 November 2020, 8:57 am
kamala-2-updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் வெற்றியை மன்னார்குடி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அபார வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே சமயம், அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டுள்ளார்.

kamala 1 - updatenews360

கமலா ஹாரிஸின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலாஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் துளசேந்திரபுரம் கிராமம் முழுவதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மன்னார்குடி அருகே அவரது குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ், தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Views: - 0

0

0