கொரோனா அதிகமாகுது… மக்களே தவறாமல் இதை செய்யுங்க : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 1:54 pm
Rangasamy Request - Updatenews360
Quick Share

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டுமென முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்திய சுகாதார ஆணையத்தின் பரிந்துரையின்படி 75-வது ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களை கௌரவிக்கப்பட்டனர்.

அதன்படி, புதுச்சேரியிலிருந்து 60 மருத்துவர்களும், காரைக்காலில் இருந்து 8 மருத்துவர்களும், மாஹேவிலிருந்து 2 மருத்துவர்களும், ஏனாமிலிருந்து 5 மருத்துவர்களும் மொத்தம் 75 மருத்துவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என அரசு பல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது என்ற அவர் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மேம்படுத்தி நிதி ஒதுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் 500 கோடி நிதி வழங்கவும் , மருத்துவ பல்கலைக்கழக புதியதாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும் மேலும் அனைத்து மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடு

க்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்றார்.

மேலும் புதுச்சேரியில் கொரொனா தொற்று ஏற்றம் இறக்கமாக உள்ள நிலையில் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களான முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Views: - 2306

0

0