பொங்கல் பரிசுக்காக கால் கடுக்க காத்திருந்த மக்கள் : 6 மணி நேரத்திற்கு பின் தொகுப்பை வழங்கிய ஊழியர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2022, 8:02 pm
Pongal Gift Slow -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : பொங்கல்பரிசு வாங்க 6 மணி நேரம் காத்திருந்த மக்கள் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாதம் செய்யப்பட்டுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 16 ஆயிரத்து 40 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 28 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல்பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி புதிய பேருந்துநிலையம் அருகில் உள்ள கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உள்ள போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக்கடை உள்ளது.

இதில் 4500க்கும் மேற்ப்பட்ட ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல்பரிசு தொகுப்புகள் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று போல்பேட்டை, டூவிபுரம், ஸ்டேட் பேங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கான நியாய விலைக்கடையில் பொங்கல்பரிசு தொகுப்புகள் வாங்க காலை 8 மணி முதல் ஆண்கள், பெண்கள் என திரண்டனர்.

ஆனால், மதியம் 1.30 மணி வரை பொங்கல்பரிசு தொகுப்புகள் ஆன்லைனில் வட்டாச்சியர் அலுவலகம் மூலம் ஏற்ற தாதமதம் ஏற்ப்பட்டதால் பொங்கல்பரிசு தொகுப்புகள் வாங்க வந்த பெண்கள் சுமார் 6 மணி நேர காத்திருப்பிற்கு பின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து, ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சார்ந்த உஷா ராணி என்ற பெண்மணி கூறுகையில், உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த 6 மணி நேரமாக பொங்கல்பரிசு தொகுப்புகள் வாங்க காத்திருப்பதாக கூறினார்.

வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் காக்க வைப்பதாக குற்றம்சாட்டினார். முதலில் தாமதத்திற்கு வேஷ்டி சேலை வரவில்லை என குற்றம்சாட்டப்பட்டதாகவும், பின்னர் சென்னையில் முதல்வர் வழங்கிய பின்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறிய அவர், எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவ்வளவு காலதாமதம் செய்யப்பட்டுள்ளதாக வருத்தமுடன் தெரிவித்தார்.

Views: - 281

0

0