கோவையில் 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீர் கூட்டம்..! குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!!

1 February 2021, 11:52 am
Cbe Petition Day- Updatenews360
Quick Share

கோவை : 10 மாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கோவையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக ஆட்சியரிடம் தெரிவிக்கும் வண்ணம் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நாளில் மாவட்ட ஆட்சியர் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.

தற்போது வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்துள்ள சூழலில் இன்று முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

Views: - 0

0

0