பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை…!

Author: kavin kumar
18 October 2021, 2:29 pm
Quick Share

வேலூர்: பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பேரறிவாளன் தற்போது ஒருமாத விடுப்பில் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார். சிறையில் இருக்கும் போது அவருக்கு ஏற்பட்ட சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரக தொற்றிர்க்காக சிடி ஸ்கேன் எடுப்பதற்காக வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Views: - 609

0

0