பேரறிவாளன் கருணை மனு: மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு.!
Author: kavin kumar30 September 2021, 10:37 pm
சென்னை: பேரறிவாளன் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதா குறிப்பிட்டுள்ளார். கருணை மனு மீதான் அனிலை என்ன? தன்னை விடுதலை செய்ய அமைச்சரவை செய்த பரிந்துரையின் மீது ஆளுநர் முடிவெடுக்க தடையாக இருப்பது எது? உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு விவரங்களை தர வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலக தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்ததாக பேரறிவாளன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் வராத நிலையில் அதே கேள்விகளை மத்திய தகவல் ஆணையத்திற்கு மனுவாக அளித்ததாகவும், அந்த மனு மாநில தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதன் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே, தனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பேரறிவாளன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் வரும் 7-ஆம் தேதிக்குள் மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
0
0