பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு : உச்சநீதிமன்றம் உத்தரவு!!

23 November 2020, 12:16 pm
Perarivalan - updatenews360
Quick Share

திருப்பத்தூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளனின் பரோல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக் கடந்த ஆண்டு சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, உடல்நலக்குறைவால் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சிறையில் இருந்து 30 நாட்கள் பரோலில் பேரறிவாளன் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, மேலும் ஒரு வார காலம் பரோல் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக மேலும் ஒரு வார காலம் பரோலை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மேலும் ஒரு வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.

Views: - 29

0

0