விழுப்புரத்திற்கு விரைந்து வந்த பேரறிவாளன் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை!!

7 November 2020, 1:46 pm
Villupuram Perarivalan - Updatenews360
Quick Share

விழுப்புரம் : தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பேரறிவாளன் தற்போது ஜாமீனில் வெளியில் வந்து வீட்டில் உள்ளார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில இதற்காக அவர் வேலூரிலிருந்து இன்று காலை புறப்பட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளன் வருகையை ஒட்டி விழுப்புரம் காந்தி சிலை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் பேரறிவாளன் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

முதற்கட்டமாக அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அப்பொழுது பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனியார் சொகுசு காரில் மருத்துவமனைக்கு வந்தார்.

Views: - 18

0

0