இறந்த குழந்தையின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு: கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்

5 July 2021, 6:31 pm
Quick Share

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி இறந்த குழந்தையின் உடலை எடுத்து வந்த பெற்றோர் பெரியகுளம் கத்தோலிக்க திருச்சபை போதகர் முன்னிலையில் கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தாசில்தார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிலவேந்திர ராஜா மற்றும் அவரது மனைவி பாத்திமா மேரி வானரசி தம்பதியினர். வானரசி கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி ஏற்படவே, தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவர்கள் பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து, காலை குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அப்போது இறந்த குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் பெரியகுளம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், இறுதியாக குழந்தையின் முகத்தை உறவினர்கள் பார்ப்பதற்காக முகத்தை திறந்த பொழுது குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதனை அறிந்த உறவினர்கள் உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு விரைந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்நிலையில் மருத்துவ நடைமுறைகளுக்கு பின் தற்போது குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த குழந்தையின் உடலை எடுத்து வந்த பெற்றோர் பெரியகுளம் கத்தோலிக்க திருச்சபை போதகர் முன்னிலையில் கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 102

0

0