அவளும் அவனும்… தனிமையில் உல்லாசம் : கள்ளக்காதல் விவகாரத்தை கணவனிடம் போட்டுக் கொடுத்த இளைஞர் கொலை… தேனியில் பகீர்!!

Author: Udhayakumar Raman
20 October 2021, 5:29 pm
Quick Share

தேனி: பெரியகுளம் அருகே தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக இளைஞரை கொலை செய்து கிணற்றில் வீசிய குற்றவாளிகளை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி மூக்கன் ராவுத்தர் தெருவை சேர்ந்த ஜவகர்சாதிக் என்பவரின் மகன் முகம்மது ஹமீம். இவர் கடந்த 27.09.21. ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து அவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமக்காபட்டி பூஜா ஹோட்டல் பின்புறம் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து பிரேதத்தை மீட்டு ஏற்கனவே காணாமல் போன முகமது ஹமீம் என்பவரா இருக்குமோ என்று சந்தேகம் அடைந்த முகம்மது ஹமீம் பெற்றோரை வரவழைத்து அடையாளம் பார்த்தபோது பிரேதத்தின் உடலில் இருந்த சட்டை மற்றும் கருப்பு கல் கலந்த கைலி வேஷ்டியை வைத்து முகமது ஹமீம் தான் என்பது அவர்களது பெற்றோரால் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து பிரேதத்தை தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பிரேதத்தின் மீது கத்திக்குத்து இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. தொடர்ந்து முகமது ஹமீம் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கெங்குவார்பட்டி இரட்டு தண்ணீர் டேங்க் அருகே குற்றவாளிகளே காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந் போது, புஷ்பராணி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த உமாயூன் மற்றும் யாசிக் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இவருடன் இருந்த மற்ற எதிரிகளான கருப்பசாமி, பின்னி பாண்டி, பாண்டீஸ்வரன் (எ)என்ற மைனா, ஷேக் பரீத் ஆகியோர்களை கெங்குவார்பட்டி பகுதியில் கைது செய்தனர். இதையடுத்து முகமது ஹமீம் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.

கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில், பெரியகுளம் கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மெடிக்கல் அருகில் வசிக்கும் இர்பான் மனைவி சௌந்தர்யா (எ) ரோஷினி என்பவருடன் ரபீக் ராஜா என்ற ஹீமாயூன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதை கொலையுண்ட முகமது ஹமீம் என்பவர் அந்தப் பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அந்தப் பெண்ணை கணவர் கண்டித்ததாக கொலையாளி ரபீக் ராஜா என்ற ஹீமாயூன் (கள்ளகாதலன்) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்போது அந்தப் பெண்ணின் கணவர் இர்ப்பான் என்பவரும் கொலையாளி ரபீக் ராஜா என்பவரை கண்டித்து உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரபீக் ராஜா முன்விரோதம் கொண்டு கொலையுண்ட முகமது ஹமீம் என்பவரை ரபீக் ராஜா மற்றும் யாசிக் ஆகியோர் ஒன்று சேர்ந்து கடந்த 27ஆம் தேதி இரவு முகமது ஹமீமை சம்பவ இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கத்தியால் குத்திக் கொலை செய்து பிரேதத்தை அடையாளம் காணாமல் இருப்பதற்காக அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தாங்கள் கொலை செய்த விஷயத்தை கருப்பசாமி, பின்னி பாண்டி, பாண்டீஸ்வரன் (எ) மைனா, ஷேக் பரீத், தங்கப்பாண்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அட்டணம் பட்டியில் தோட்டத்தில் ஒன்று கூடி அங்கு வைத்து கொலை செய்த தடயங்களை தீயிட்டு எரித்து தடயங்களை அளித்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மொத்தம் ஏழு நபர்களில் தற்போது ஆறு நபர்கள் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் தன்னுடைய கள்ளக்காதல் வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக இளைஞர் ஒருவரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது கெங்குவார்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 290

0

0