இரவோடு இரவாக மீண்டும் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!!

16 April 2021, 9:07 am
Periyar Road -Updatenews360
Quick Share

சென்னை : பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் ஈவெரா சாலைக்கு மீண்டும் அந்த பெயர் பலகையில் ஈவெரா பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

சென்னை ரயில் நிலையம் அருகே உள்ள பெயர் பலகையில், ஆங்கிலேயர் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் 1979ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூறற்ண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அந்த சாலைக்கு ஈவெரா என பெயர் மாற்றம் செய்தார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈவெரா பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் கேராது என்று பெயர் வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் அந்த பெயரை திராவிட விடுதலை கழகத்தினர் கருப்பு மை பூசி அழித்தனர். பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், நேற்று இரவோடு இரவாக கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயரை மறைத்து ஈவெரா பெரியார் சாலை என்ற பெயரில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

Views: - 79

0

0