பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு : கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டாஸ்.. கோவை கமிஷ்னர் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2022, 4:47 pm
Cbe Periyar Statue Gundas - Updatenews360
Quick Share

கோவை : கோவை வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும் காவி பொடி தூவியும் அவமரியாதை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26), மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் (வயது 28) ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சூழலில் அருண் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கோவை மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் போலீசார் வழங்கியுள்ளனர்.

Views: - 215

0

0