பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்கள்! திருச்சியில் பதற்றம்!!

27 September 2020, 9:24 am
Periyar Statue Insult - Updatenews360
Quick Share

திருச்சி : பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்களை போலீசார் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம் குளத்தூர் ஊராட்டியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை அகற்றி, காவி சாயத்தை துடைத்து சுத்தம் செய்தனர். இதையறிந்து அப்பகுதியில் பெரியார் ஆதரவாளர் கூட்டமாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களுடன் பல்வேறு அரசியல் கட்சியினர் திடீரென ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றவாளிகள் மீது கடும் தண்டனை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். அப்பகுதியல் பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 8

0

0