மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு : காவி துண்டு போட்டதால் பரபரப்பு :

1 March 2021, 3:48 pm
Periyar Statue -Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : ஓரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஆறடி உயரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் நள்ளிரவில் காவி துண்டு மற்றும் தலையில் தொப்பி அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது .

இதுதொடர் பாக ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும், மேலும் கல்லூரி மற்றும் அருகில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மர்மநபர்கள் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடக்கும் சமயத்தில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போற்றியது திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .மேலும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 10

0

0