தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் : மரியாதை செலுத்திய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 11:39 am
OPS Honour -Updatenews360
Quick Share

தேனி : பெரியகுளத்தில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி பாராளுமன்ற அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிந்தரநாத், மாவட்ட செயலாளர் சையது கான், முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி. ராதா துணைச் செயலாளர் அப்துல் சமது மற்றும் கட்சி நிர்வாகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Views: - 226

0

0