நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு? இன்று சட்டப்பேரவையில் நீட்-க்கு எதிரான மசோதா தாக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 9:08 am
Neet CM - Updatenews360
Quick Share

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற சட்டப்பேரவையில் இன்று மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தல் நீட் தேர்வு மூலம் மருத்துவகல்லூரியில் மாணவர்க சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

இந்த நிலையில் நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். அந்த குழு நீட் தேர்வு பாதிப்புகளை குறிப்பிட்டு தேர்வை ரத்து செய்ய பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது

இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வுக்கு பயந்து சேலத்தில் மாணவர் தற்கொலை செய்தார். இதனால் மீண்டும் நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவ- மாணவிகளின் தற்கொலைகள், கல்வி, மாநில பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை வலுவடைய வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடங்குவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா இன்று நிறைவேற உள்ளதாக தெரிவித்தார்.

நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும் வரை சட்டரீதியான போராட்டம் தொடரும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 143

0

0