குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு : அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கோவை, திருப்பூர் மக்கள் நன்றி

1 December 2020, 10:53 pm
Quick Share

சப்ப தண்ணிய குடிச்சு சளி , இருமல்ல சாக கெடந்தோம், சிறுவாணி, பில்லூர், அவிநாசி அத்திக்கடவு, ஆழியாறு, அமராவதி, பவானி ஆத்து தண்ணிய அப்படியே திருப்பி ஊரெல்லாம் கொடுத்து தாகம் தீர்த்து வெச்சிட்டாரு..”

போர் தண்ணியால ஏகப்பட்ட வியாதி வந்துச்சு. ஆஸ்பத்திரி டாக்டர்னு அலஞ்சு திரிஞ்சோம். சுத்தமில்லா தண்ணியால தான் இத்தன நோவுன்னு சொன்னாங்க. நல்ல தண்ணீ எப்ப கிடைக்கும்னு கண்ணீரோட காத்திருந்தோம். கரிசனமா திட்டம் போட்டு கல்கண்டு மாதிரி தண்ணி கொடுத்துட்டாரு.. என கோவை, திருப்பூர் ஜில்லாவில் கிராமத்து ஜனங்களின் வெள்ளந்தியான பேச்சை கேட்டு விசாரிக்க கிளம்பினோம்..

சிறுவாணி அடிவார கிராமங்களான இருட்டுப்பள்ளம், காருண்யா நகர் செம்மேடு , ஆலாந்துறை, மாதம்பட்டி, சென்னனூர் உள்ளிட்ட கிராமங்களில் சிறுவாணி குடிநீர் சப்ளை ஆகி வந்தது. இங்கே குடிநீர் தேவை அதிகமாக இருந்தது. தொண்டாமுத்தூர் வட்டாரம் பஞ்சத்தில் அடிபடும் என பலர் பரவலாக விமர்சனம் செய்யத் துவங்கிய நேரத்தில் ஊருக்குள் சென்று தண்ணீர் பஞ்சத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்க என கேட்டோம்.

” எங்க ஊர்ல ரெண்டு மூனு தலைமுறைக்கு தண்ணீர் பஞ்சம் வராது. எல்லா வீட்டுக்கும் எல்லா விதிக்கும் பைப் போட்டாச்சு. சும்மா யாராவது வந்து ரோட்டோரத்தில் இருக்கிற பைப் திறந்தா கூட சிறுவாணி, பவானி ஆத்துத் தண்ணி கொட்டும். தாகம் தீர குடிச்சு சந்தோசமாக போகலாம். கோவை குற்றாலம், ஈஷா யோகா போற ஜனங்க எல்லாம் ரோட்டோர பைப்ல தண்ணீ புடுச்சு குடிக்கிறாங்க. கடையில விக்கிற மினரல் வாட்டர் எல்லாம் டூப்பு.

எங்க ஊர் பைப் தண்ணி தான் டாப். தொண்டாமுத்தூர் தொகுதியில் தாகம் தீர்க்க வந்த தர்மராசாவ அமைச்சர் வேலுமணி இருக்காரு. புதர் காடாய் இருந்த பூமி எல்லாம் புதுப்பொலிவா மாறிருச்சு. நாலஞ்சு தலைமுறை நல்லா இருக்கிற மாதிரி பாசனத் திட்டத்தை அமைச்சர் பண்ணிட்டாரு,” என ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் மக்கள் பெருமையாக பேசினார்கள்.

நரசிபுரம், செம்மேடு பகுதி மக்கள் ,” லாரி நிறைய தண்ணீ தர்றோம். பஞ்சம் பசி பட்டினி எல்லாம் அந்தக் காலம். எங்க தொகுதி எப்பவுமே வளமா தான் இருக்கு. முப்போக விளைச்சலுக்கும் நொய்யல் ஆத்து தண்ணி இருக்குது. சித்திரை சாவடி, பாசன வாய்க்கால்ல தண்ணி பாயுது. இங்க கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் பசுமை தான்,” என்றார்கள்.

நரசிபுரம் விவசாயியை கந்தசாமியிடம் கேட்ட போது,” உக்குளம் புதுக்குளத்தில் இருந்து கோவை திருப்பூர் வட்டாரத்தில் 28 குளங்கள் 20 தடுப்பணைகள், 1300 கிலோ மீட்டர் தூர வாய்க்கால்கள் சீரமைக்கும் வேலை மும்முரமாக நடக்குது.

காஞ்சு கிடந்த பூமி எல்லாம் தென்னை வாழை என இப்போ காய்ச்சு தொங்குது. விவசாயிகள் மனசும் வயல்காடும் நிறஞ்சு போய் இருக்கு. நொய்யல் ஆத்து வேலை முடிஞ்சா காவிரி டெல்டா ஏரியா அளவுக்கு இங்க அதிகமா சாகுபடி நடக்கும் பாருங்க,” என்றார்.

Views: - 0

0

0