கோவில் திருவிழா, சூரசம்ஹார நிகழ்வுகளுக்கு அனுமதி.. தியேட்டரில் 100% ரசிகர்கள் : தளர்வுகளை அறிவித்த புதுச்சேரி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2021, 12:46 pm
Theatre Curfew - Updatenews360
Quick Share

புதுச்சேரி : நாளை முதல் கூடுதல் தளர்வுகள் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 100% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவலை குறைக்கும் விதமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் புதுச்சேரியில் இரவு நேரம் கடைகள் திறப்பதற்கான கால அவகாசம் 10 மணியிலிருந்து 11 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் எனவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்வுகளை நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 312

0

0