புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அனுமதி

14 June 2021, 10:48 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16-ம் தேதி முதல் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து உச்சத்தைத் தொடத் தொடங்கியது.புதுச்சேரியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கம் கோரத்தாண்டவமாடிய நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஜூன் 1 முதல் 7 வரை மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இந்த தொடர் ஊரடங்கு காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம் மற்றும் அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.இதனால் வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. தளர்வுகளின் மற்றொரு பகுதியாக புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 16-ம் தேதி முதல் 100 பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் ஊழியர்கள் பணி புரிய வேண்டும். மேலும் தடுப்பு நடவடிக்கைளையும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 394

0

0