இப்படி கூட திருடுவாங்களா….கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல் மாயம்: சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த கடைக்காரர்..!!

Author: Rajesh
29 March 2022, 1:44 pm
Quick Share

கோவை : கோவையில் கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த நாளிதழ்களை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை ஸ்டேட் பாங்க் சாலையில் சரவணன் என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாளிழ்கள் விற்பனைக்காக, கடையின் முன்பு பேப்பர் ஏஜெண்டுகள் தினசரி நாளிதழ்களை வைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று பேப்பர் ஏஜெண்டு விற்பனைக்காக சுமார் 1,210 ரூபாய் மதிப்புள்ள நாளிழ்களின் பண்டலை வைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலையில் கடையை திறந்த சரவணன் தினசரி வைக்கபடும் நாளிதழ்கள் மாயமனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் பேப்பர் பண்டலை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதுகுறித்து பேப்பர் ஏஜெண்ட் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பந்தயச்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 537

0

0