‘ஸ்பைகி வந்தாச்சு’ : இரண்டு நாட்களுக்கு பிறகு உரிமையாளரை தேடி வீட்டுக்கே வந்த செல்லப் பிராணி.. நெகிழ்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2021, 5:10 pm
அரியலூர் : தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள நாய்களை சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினர் 50 கி.மீ தாண்டி நாயை விட்டதற்காக செல்லப்பிராணி உரிமையாளர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் நாய் மீண்டும் வீட்டிற்கு வந்ததை கண்டு நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை குடியிருப்பிற்கு எதிரே வசித்து வருபவர் ராஜகோபால். இவர் செல்லமாக வளர்த்து வந்த ஸ்பைகி என்ற நாய் உள்ளிட்ட பல்வேறு நாய்களை ஆலை நிர்வாகத்தினர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வனப்பகுதியில் விட்டதாக கூறப்படுகிறது.
இதனையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இச்சம்பவத்திற்காக ஸ்பைகியின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் 20 க்கும் மேற்பட்ட சிமெண்ட் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் நாய் உரிமையாளர்களை அழைத்து சென்று பாடாலூர் வனப்பகுதியில் தேடி கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தாமரைக்குளம் வந்துள்ளனர்.
இந்நிலையில் 50 கிலோ மீட்டர் தாண்டி விடப்பட்ட ஸ்பைகி நாய் வீட்டிற்கு வந்துள்ளதை கண்டு குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைத்துள்ளனர்.
0
0