வெற்றிபெற்றவர்களின் விவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் : தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு

Author: kavin kumar
20 February 2022, 8:36 pm
Quick Share

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கி, வெற்றி பெற்றவர்களின் விபரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சிறப்பு பார்வையாளரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போதும், பிரச்சாரத்தின் போதும் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திமுகவினரின் செயலுக்கு பல்வேறு இடங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டதினால் எதிர்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தனர்.

இதனிடையே கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பு பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நாகராஜ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று கோவை பந்தயசாலை பகுதியில்,உள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் சிறப்பு பார்வையாளர் நாகராஜனை சந்தித்து அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்பி வேலுமணி தலைமையில் இன்று மனு அளிக்கபட்டது.

இதனை தொடர்ந்து பந்தயசாலை பகுதியில், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நிறைவு பெற்றுள்ள நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உளள்து, இந்த நிலையில் தேர்தல், அதிகாரிகள், திமுகவிற்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே முறையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். உடனுக்குடன் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயரை அறிவிக்க வேண்டும்.” என்றார்.

Views: - 374

0

0