‘காணாம போன குளத்தை கண்டுபிடிச்சு தாங்க ஐயா’: சினிமா பாணியில் ஆட்சியரிடம் மனு அளித்த நபர்..!!

Author: Aarthi
2 August 2021, 5:15 pm
Quick Share

திருச்சி: திரைப்பட பாணியில் காணாமல் போன குளத்தை கண்டுபிடித்து தருமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, புகார் அளிக்க வந்த சம்சுதீன் அரியமங்கலம் கோட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிடி நாயுடு தெருவிற்கு பின்புறம் உள்ள வாணியன் குளம் ஆக்கிரமிப்பால் காணாமல் போனது தொடர்பாக மனு அளித்திருந்தார். தனது அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

Person-petitioned-collector-to-find-missing-pond-in-Trichy

ஜிடி நாயுடு தெருவிற்கு பின்புறமாக உள்ள வாணியன் குளம் பகுதி, மொத்தம் ஏழு ஏக்கருக்கு மேல் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு இன்று அரை ஏக்கர் அளவிற்கு வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆக்கிரமிப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போன வாணியன் குளத்தை மீட்டுத் தர வேண்டும். அதில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆக்கிரமிப்பினை மேற்கொண்டவர்கள் அனைவரும், நீர் நிலைகளை மறித்து வீடுகளை கட்டி உள்ளனர் என்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருப்பதாக இப்பகுதிகள் கூறுகின்றனர்.

பொதுவாக இப்பகுதியில் அதிகப்படியாக பெருவெள்ளம் ஏற்படும்போது, இந்த குளம் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்காலை நீர் சென்றடையும். ஆனால் இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் தண்ணீர் பாய்ந்தோடி வாய்க்காலை அடையவும் வழியில்லாமல், வடியவும் வாய்ப்பில்லாமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 173

0

0