ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்த மனுதாரர் : படுத்த படுக்கையாக கண்ணீர் கோரிக்கை!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 10:32 am
Ambulance Petition -Updatenews360
Quick Share

ஈரோடு : ஆட்சியர் ஆபீசில் ஆம்புலன்சில் வந்து தனது பங்கை பெற்றுத்தரக் கோரி கட்டிடத் தொழிலாளி மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்தியூர் சங்கரா பாளையம் தொழிலாளி நடராஜன் (வயது 58). ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் ஆம்புலன்சில் வந்த நடராஜன் மனு அளித்தார்.

அந்த மனுவில் நான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்துள்ளேன். நடந்து  சென்றபோது தவறிக் கீழே விழுந்து முதுகு தண்டுவடம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளேன்.

எனது குடும்பத்துக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எனக்கு இன்னும் ஒரு ஏக்கர் நிலம் வரவேண்டிய பாக்கி உள்ளது. இதனை எனது அண்ணன் தர மறுத்து வருகிறார். தற்போது என் மனைவியும் மகனும் என்னுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

நான் எனது தாயார் பராமரிப்பில் இருந்து வருகிறேன் எனக்கு உரிய பங்கை வாங்கி தர நடவடிக்கை எடுக்கவும், என்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்கவும் அரசு சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி மனுவில் தெரிவித்துள்ளார்

Views: - 238

0

0