இன்றோடு 25 நாட்கள் ஆகிருச்சு…ஆறுதல் அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் இதோ..!!

Author: Rajesh
1 May 2022, 8:13 am
Petrol Diesel- Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 25வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது என காரணம் கூறப்பட்டது. எனினும், கடந்த 24 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 25வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 2183

0

0