பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: 7 மாநிலங்களில் ரூ.100ஐ கடந்து விற்பனை..!!

20 June 2021, 8:04 am
Petrol Rate - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.58 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.14 ரூபாய், டீசல் லிட்டர் 92.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் 98.40 ரூபாய்க்கும் , டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து லிட்டர் டீசல் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 121

0

0