சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 110 வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 109 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 110வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இப்படியே போனால் 200 நாட்களானாலும் விலையில் மாற்றமில்லாமல் போகுமோ..? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…
இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…
This website uses cookies.