உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை : விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!!

7 July 2021, 1:16 pm
Naam Tamilar - Updatenews360
Quick Share

கோவை : பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசு செயல் பட்டு வருகினற்து என பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியினர் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டமானது, நாம்தமிழர் கட்சியின், மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், என்றும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன முழக்கங்களை கோஷங்களாக எழுப்பியவாறு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அப்துல் வகாப் கூறுகையில் “பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தில் ஏங்கேயும், ஒரு ஆர்ப்பாட்டமோ, அல்லது, எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்ய வில்லை. மத்திய அரசின் இந்த செயலை கண்டு களத்தில் போராடி கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே.” என்றார்

Views: - 138

1

0