பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைய வாய்ப்பிருக்கா?: இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Rajesh
27 January 2022, 8:16 am

சென்னை: 84வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 84 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 84வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை ஒரேவிலையில் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்தாலும், விலை குறைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • mysskin asks 5 lakhs for speech in cinema functions 5 லட்சம் இல்லைனா எனக்கு ஃபோன் பண்ணாதீங்க- மேடையில் புது கண்டிஷன் போட்ட மிஷ்கின்?