இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ரூ.108ஐ தொடும் பெட்ரோல்…ரூ.103ஐ கடந்த டீசல்..!!

Author: Aarthi Sivakumar
1 November 2021, 8:20 am
Petrol Price - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முதன்முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சமடைந்தது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1170

0

0