அதிமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : போலீசார் விசாரணை

Author: kavin kumar
12 February 2022, 7:11 pm
Quick Share

ஈரோடு : ஈரோடு அருகே அதிமுக பிரமுகரின் பண்ணை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சி முத்து கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்- விஜயலட்சுமி தம்பதியர். அதிமுக பிரமுகரான சுந்தர்ராஜனுக்கு சொந்தமான பண்ணை வீடு அதே பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று பண்ணை வீட்டில் மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில், வீட்டின் கதவு மற்றும் காலிப்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. சத்தம் கேட்ட பண்ணை வீட்டில் பணியாற்றி வரும் ஆறுமுகம்,

இதுகுறித்து சுந்தர்ராஜனுக்கு தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் , பெருந்துறை டிஎஸ்பி சண்முகம் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்து தொழிலாளி ஆறுமுகத்திடம் தகவலை கேட்டறிந்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை போலீஸ் மோப்ப நாய் பவானி ஆய்வு செய்தது. மேலும் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டு வீச்சுக்கு முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள்.

Views: - 467

0

0