குமரி சிறப்பு எஸ்.ஐ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் : கைது செய்யப்பட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!!

7 July 2021, 10:56 am
SI Petrol Bomb- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அருமனை அருகே சிறப்பு எஸ்.ஐ., வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு கல்லுப்பாலத்தை சேர்ந்த செலின்குமார் களியக்காவிளை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளார்.

கடந்த 3 ம் தேதி அதிகாலையில் இவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் தீப்பற்றி எரிந்தது. குழித்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் குண்டு வீசியதற்கான தடயங்கள் சிக்கின. அண்டை வீடுகளில் உள்ள கேமரா காட்சிகளில் இருந்து இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தொடர் கேரளா போலீசார் உதவியுடன் தமிழக கேரள எல்லையான சோதனைச் சாவடியில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பெட்ரோல் குண்டு வீசிய அருண் என்பவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரணை நடத்தியபோது வழக்கொன்றில் உதவி ஆய்வாளர் மீது ஏற்பட்ட விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியதாக கூறினான்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய விஜயலால் என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்

Views: - 339

0

0