ரூ. 2000 நோட்டு கொடுத்து பெட்ரோல் போட்ட வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந் திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு கள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்.,30 ஆம் தேதி வரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும், வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்ப தால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் தனது இருசச்கர வாகனத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 2 ஆயிரம் ரூபாயை காட்டி , 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஊழியரும் பெட்ரோல் நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபா ய்த் தாளை வாங்கி பெட் ரோல் பங்கு சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது எனக் கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு பெட்ரோல் நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் பெண் சூப்பர்வைசர் கூறியதின் படி, ஊழியர் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் உறிஞ்சு குழாயை எடுத்து வந்து பெட்ரோல் முழுவதையும் உறிஞ்சு எடுத்துவிட்டார்.
பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அங்கு இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.