ரூ.99ஐ கடந்த பெட்ரோல் விலை: டீசல் விலையும் தொடர்ந்து உயர்வு…கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!!

Author: Aarthi Sivakumar
26 June 2021, 8:14 am
petrol price - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.19க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.88க்கும், ஒரு லிட்டர் டீசல் லிட்டர் ரூ.92.89க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.99.19க்கும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.93.23க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 187

0

0