மீண்டும் ரூ.100ஐ கடந்தது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
3 October 2021, 8:21 am
Petrol - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ கடந்து விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆக்ஸ்டு மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது.

இதன் காரணமாக ரூ.102க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் வந்தது. டீசலும் அதே போல் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 80 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 28 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 2 காசுக்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை அதிகரித்து மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வால் வாகன ஓட்டிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Views: - 912

0

0