விடாமல் விலை உயரும் பெட்ரோல்: இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..வாகன ஓட்டிகள் அப்செட்..!!

14 June 2021, 7:56 am
petrol price - updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றம் கண்டு வருகிறது.

Petrol Pirce - Updatenews360

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் ராஜஸ்தானில் ரூ.100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. எரிபொருள் விலை உயர்வால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.43 ரூபாய், டீசல் லிட்டர் 91.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 97.69 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ 91.92 ஆகவும் உயர்ந்துள்ளது.

Views: - 116

0

0