கோவையில் சதமடித்த பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
27 June 2021, 9:45 am
Quick Share

கோவை: கோவையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்ததிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, பல நூதன போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையை பொருத்தவையில் கடந்த ஒரு சில நாட்களாகவே பெட்ரோல் விலை ரூ.99 ஐ கடந்திருந்த நிலையில் இன்று முதன் முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.97 ஆகவும், ஒரு லிட்டர் பவர் பெட்ரோல் விலை ரூ.102.83ஆகவும் அதிகரித்துள்ளது. இது வாகன ஓட்டிகளை வேதனையடையச் செய்துள்ளது.

Views: - 196

0

0