பெட்ரோல் விலை உயர்வு….டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

12 July 2021, 8:19 am
petrol price - updatenews360
Quick Share

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டி விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ 101.92 ரூபாயாக்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Views: - 382

0

0